#BREAKING : முதுநிலை மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு – தமிழ்நாடு மருத்துவத்துறை அரசாணை வெளியீடு.!!

Estimated read time 1 min read

முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

non service முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பின் இரண்டு ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் என்பதை ஓராண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

படிப்பு முடிந்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ரூபாய் 40 லட்சத்திற்கு பதில் ரூ 20 லட்சம் கட்டினால் போதும். முதுநிலை பட்டய படிப்பு மாணவர்கள் ரூபாய் 20 லட்சத்திற்கு பதில் 10 லட்சம் செலுத்தினால் போதும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author