அவருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்..! இந்திய அரசுக்கு சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!!

Estimated read time 1 min read

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில், ராகுல் ட்ராவிடின் தலைமை பயிற்சியாலும் இந்திய அணியின் கடுமையான முயற்சியாலும் இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயலாற்ற தொடங்கியவர் தான் ராகுல் டிராவிட்.

இவர் இந்திய அணிக்காக 16 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார், அதில் 164 டெஸ்ட், 344 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை, மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான பிறகு தற்போது இந்த ஆண்டில் வென்ற ஐசிசி கோப்பை தான் அவரது வாழ்க்கையில் முதல் ஐசிசி கோப்பையாகும்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட்டிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென அவரது மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் கொடுக்கப்படும் பாரத் ரத்னா விருது என்பது சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டது.

தற்போது, ராகுல் டிராவிட்டின் இந்த சாதனை என்பது இந்திய நாடு முழுவதும் மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதனால், இந்தியாவின் மிகப்பெரிய மரியாதை கூறிய விருதான பரத் ரத்னா விருதை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும். மேலும், மக்கள் அனைவரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய நாட்டின் தலைசிறந்த மகன் பாரத் ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வதற்காக காத்திருக்கிறேன்” , என்று அதில் கூறி இருந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author