பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

Estimated read time 1 min read

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இந்த ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் வரும் ஜூலை 26-ம்தேதி தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி தொடர்ந்து ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஒலிம்பிக் தடகளபோட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் அறிவித்துள்ளது.

இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இதில் 5 தமிழக வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா மீண்டும் இந்த ஒலிம்பிக் போட்டியில் களமிறங்குகிறார்.

ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோருடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஒலிம்பிக்கில் டிராக் & பீல்டு போட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் 11-ம் தேதி வரை ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்திய தடகள அணி விவரம் :

ஆடவர் :

அவினாஷ் சேபிள் (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்)
நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்)
தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்)
பிரவீன் சித்ரவேல், அபுல்லா அபூபக்கர் (டிரிபிள் ஜம்ப்)
அக் ஷ் தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கி.மீ. நடைப்பயிற்சி)
முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்)
மிஜோ சாக்கோ குரியன் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்)
சூரஜ் பன்வார்(நடை பந்தய கலப்பு மராத்தான்)
சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்).

மகளிர் :

கிரண் பஹால் (400 மீ)
பருல் சவுத்ரி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5,000 மீ)
ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டம்)
அன்னு ராணி (ஈட்டி எறிதல்)
அபா கதுவா (குண்டு எறிதல்)
ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யாராம்ராஜ், பூவம்மா எம்ஆர் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்)
பிராச்சி (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்)
பிரியங்கா கோஸ்வாமி (20 கி.மீ. நடை பந்தயம் / நடைபந்தய கலப்பு மராத்தான்).

The post பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..! appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author