குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC!

Estimated read time 1 min read

TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது.

துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட இடங்களில் உள்ள 90 காலிப்பணியிடங்களை நிரப்பு நடப்பாண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை குரூப் 1 தேர்வு விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள ஒரு முறை பதிவு (OTR) தளத்தில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை உடனடியாகப் பூர்த்தி செய்யலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதிக்குப் பிறகு, விண்ணப்பத் திருத்தச் சாளரம் மே 2 முதல் 4ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு செயலில் இருக்கும். இதை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்துகொள்ளலாம்.

இதன்பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தில் எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது. மேலும், குருப் – 1 தேர்வு குறித்து எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு மையங்கள் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்துகொள்ள www.tnpsc.gov.in/Document/english/pdf இதனை க்ளிக் செய்யவும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் #Group_1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது.. https://t.co/i9P5YRBzHH#TNPSC pic.twitter.com/OHMPCY1sKI

— TNPSC தகவல் களஞ்சியம் (@TNPSC_CORNER360) March 28, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author