உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..!

Estimated read time 1 min read

Anna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த உதவி பேராசிரியர் பணிக்கு 88 காலியிடங்கள் உள்ளன . இந்த உதவி பேராசிரியர் பணிக்கு நீங்கள் ஆன்லைனிலும் மற்றும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆஃப்லைனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளோர், தங்களது விண்ணப்பங்களில் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களின் நகலையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லனில் விண்ணப்பிப்போர் எல்லா ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் எடுத்து வைத்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் வேலை தேடும் அனைவருமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் அனைவரும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டால் வேலை கிடைக்கும். மேலும், சம்பள விவரங்கள் தேர்வுப் பட்டியல், தகுதிப் பட்டியல், தேர்வு முடிவுகள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்யவும் மற்றும் வேலை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://annauniv.edu/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

கல்வி தகுதி :

கல்வி தகுதியாக விண்ணப்பிக்கும் அனைவரும் BE/ B.Tech/ B.SC/ ME/ M.Tech/Ph.D முடித்திருக்க வேண்டும். வயது வரம்பாக குறைந்தபட்சம் 24 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, பாடத் துறை வல்லுனர்கள் முன் வழங்குதல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் மற்றும் தேதி விவரங்கள் :

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக SC/ SC(A)/ ST பிரிவினருக்கு ரூ. 400 மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் நீங்கள் கட்டணம் கட்டி கொள்ளலாம். மேலும், ஆன்லனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதியாக 01-04-2024 எனவும் ஆஃப்லைனனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதியாக 05-04-2024 அறிவித்துள்ளனர்.

முகவரி :

ஆஃப்லைனனில் விண்ணப்பிப்போர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அத்தியாவசிய ஆவணங்களுடன் பதிவாளர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 025. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

உதவி பேராசிரியராக வேலை தேடும் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் இதை பகிருங்கள்.

The post உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..! first appeared on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author