தென் மாவட்ட இளைஞர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்… உங்க ஊரிலேயே ஐடி வேலை…!!!

Estimated read time 1 min read

சென்னை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் தென் தமிழகத்திலும் மதுரையிலும் ஐடி நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி பெங்களூரை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் மக்கள் வர்த்தகம் செய்யும் ஐடி சேவை நிறுவனமான Happiest Minds நிறுவனம் மதுரையில் தனது கிளையை மேம்படுத்த உள்ளது.

மதுரையில் தயா சைபர் பார்க்கில் புதிய டெவலப்மெண்ட் சென்டரை இந்த நிறுவனம் திறந்து உள்ளது. இந்த புதிய டெவலப்மெண்ட் சென்டரில் 250 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இதில் ஏற்கனவே 550 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தென்மாவட்டத்தில் எவ்வளவு பெரிய ஐடி நிறுவனம் மேம்படுவது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author