பிப்ரவரி 10-இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!!!

Estimated read time 1 min read

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த MRF நிறுவனம் உட்பட பல மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் அதிகமான தனியா நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன.

மேலும் இந்த முகாமில் வெளிநாட்டு நிறுவனங்கள், சுய தொழில் செய்வது மற்றும் அரசு கடல் உதவி பெறுவது ஆகியவை பற்றி கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் மூன்று மணி வரை நடைபெற உள்ள நிலையில் ஆதார் மற்றும் கல்வி சான்றிதழ் உடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் விவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு முன்பதிவு செய்யலாம். அது மட்டுமல்லாமல் 9499055913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author