ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

Estimated read time 1 min read

சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
நேற்று இரவு 8:00 மணியளவில் ஜார்க்கண்டில் உள்ள குமான் ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் நடந்தது.
அந்த ரயிலின் இன்ஜினில் தீப்பற்றியதாக வதந்தி கிளம்பியதை அடுத்து, பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.
இதனால் பயத்தில் சிலர் அருகில் இருந்த பாதையில் குதித்தனர். அப்போது அந்த வழியாக எதிரே வந்த சரக்கு ரயிலில் அவர்கள் விழுந்து உயிரிழந்தனர்.

Please follow and like us:

More From Author