ராசி இந்த வாரம்
(29-09-2019 முதல் 05-10-2019 வரை)


ஜோதிட வித்வான் காஞ்சி ஏலேஸ்வரம் சந்திரசேகர்

மேஷம் :

புதிய வாகனம் வாங்குதல், ஆரோக்கியத்தில் மேன்மை, எதிரிகள் தொல்லை மறைவு, பணவரவு, எடுத்த காரியத்தில் வெற்றி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள், புதிய பதவி, புதிய பொறுப்புகள் ஏற்பது ஆகிய மிக முக்கிய நற்பலன்கள் இவ்வாரத்தின் நிகழ்வுகளாக அமையும் வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வாயிலான மனக்கவலை ஏற்படக்கூடும். சிலருக்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடிய கிரக சூழ்நிலைகள் தெரிகிறது.

ரிஷபம்:

குரு ஸ்தானத்தில் இருந்து ஜீவசமாதி அடைந்த மகான்களை வணங்கி, அவர்களின் அருளைப் பெற்றிடும் பாக்யம் கிடைக்கும். குருவருள் துணையாய் அமையும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சு சுமூகமாக அமையும் கிரக நிலைகள். எதிரிகளால் தொல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீட்டைவிட்டு தொலைதூரம் செல்லும் நிலை ஏற்படும். வயிறு, பல் மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பித்தம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வெளிநாடு அல்லது வெளிநாடு சம்பந்தமான வேலை, வியாபாரத்தில் சற்று பின்னடைவு ஏற்படலாம்.

மிதுனம்:

பணவரவு, மறைமுக எதிர்ப்பு நீங்குதல் ஆகிய நற்பலன்கள் இந்த வாரமும் தொடரும். உங்கள் பெண் நண்பர்களிடம் வாக்குவாதம், விரோதம் ஏற்படும் கிரகநிலைகள் காணப்படுகிறது. உங்கள் குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் ஏற்படும் சூழ்நிலை இந்த வாரமும் தொடரும். நண்பர்களால் நன்மையும், பணவரவும் எதிர்பார்க்கலாம். பெரியோர்களின் ஆசியும், மகான்களின் அருளும் கிட்டும். ஞானிகள், மதகுருமார்களின் தரிசனம் கிட்டும்.

கடகம்:

சிலருக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். எதிரிகளால் அச்சுறுத்தல், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். எனினும், அதனை வென்று, உங்கள் செல்வாக்கை உயர்த்தும் கிரக நிலைகள் சாதகமாக அமைந்துள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும், பிறந்த குழந்தைகளால் ஆனந்தமும், அனுகூலமும் உண்டாகும். இதனால், உங்களுக்கு புதிய அந்தஸ்தும் ஏற்படும்.

சிம்மம்:

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வீண் விரயங்கள், கண் சம்பந்தமான பிரச்சினைகள், கொடுக்கல், வாங்கலில் பின்னடைவு, அதனால் அவமானம், அவப்பெயர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுண்டு.  கோபம் என்பதை அறவே புறந்தள்ளுவதால், இத்தகைய சிரமங்களில் இருந்து சற்றே விடுபடலாம். உங்கள் நிலைமையில் இருந்து சற்று கீழிறங்கும் நிலைமைக்குத் தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது அதிக கவனம் வையுங்கள். அவர்களின் எதிர்மறையான செயல்களால், பெற்றோருக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கன்னி:

உங்கள் பதவியில் மாற்றம், புதிய வேலைக்கு மனு போடுதல், முயற்சிகளுக்கு தடை, தாமதங்கள் ஆகியவை இந்த வாரமும் தொடரும். உங்கள் புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படும் கிரக சூழ்நிலைகள் காணப்படுகிறது. நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு துணை நிற்காமல் போகலாம். உடல் நலனில் அக்கரை காட்டுங்கள். வேளைக்கு உணவு உண்பதும், வீட்டு உணவையே உண்பதும், வெளி இடங்களில் உணவு உண்பதைத் தவிர்ப்பதுமே உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிகோலும் வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது.

தொடர்புடையவை:  குருப் பெயர்ச்சி பலன்: மேஷம், ரிஷபம்

துலாம்:

எதிரிகள் தொல்லை அகலும், பணவரவு கூடும், எடுத்த காரியத்தில் சுலபமான வெற்றி, புதிய வண்டி, வாகனங்கள் வாங்குதல், பழைய வாகனங்களை நல்ல விலைக்கு விற்றல் ஆகிய நற்பலன்கள் நடக்கும். தந்தை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தொல்லை ஏற்பட்டு அகலும். ஆனந்த சுற்றுலா செல்வீர்கள், ஆரோக்கியத்தில் சற்றே பின்னடைவு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தந்தை வழி உறவுகளால் தொல்லை. புது ஆடைகள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்:

சிலருக்கு வீடு மாற்றம், தொழிலில் மந்த நிலை, உங்கள் மீது சிலர் களங்கம் விளைப்பது ஆகிய அசுப பலன்கள் ஏற்படும் கிரக சூழ்நிலைகள் உள்ளது.  சிலர் வெளிநாடு செல்லும் நிலையும், சிலருக்கு தங்கள் உடைமைகள் தவறவிடுவதும், திருடுபோவதும் நடக்கும் நிலை ஏற்படலாம். சிலருக்கு சொந்தபந்தங்களை விட்டுவிட்டு நீண்ட்தூரப் பயணம் மேற்கொள்ளும் தற்காலிக நிலை ஏற்படும் வாய்ப்பும் உண்டு. சிலருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் வரும். தொழிலாளர்கள் தங்கள் கையாளும் ஆயுதங்களால் தீங்கு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

தனுசு:

சிலருக்கு தொழில், வியாபாரம் சம்பந்தமாக வீட்டைவிட்டுப் பிரிந்து, கடல்கடந்து செல்லும் வாய்ப்பும், உங்கள் சொந்தங்களில் எவரேனும் ஒருவருக்கு ஆரோக்கிய சீர்கேடும் ஏற்படும். மேலும் உங்கள் உடல்நலனிலும் சற்றே அக்கரை காட்டுங்கள். செய்தொழிலில் இடமாற்றம், பணநஷ்டம் ஆகிய எதிர்மறை பலன்கள் ஏற்படக்கூடிய அளவில் கிரகநிலைகள் இருப்பதைக் குறிக்கிறது. எதிர்பாலினத்தாருடன் சற்றே கவனத்துடன் இருக்கவும். இதில் கவனக்குறை ஏற்படும்பட்சத்தில் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும்.

மகரம்:

எதிரிகள் தொல்லை அகலும். இதே நிலை அடுத்த சில மாதங்கள் வரை தொடரும். பித்தம் சம்பந்தமான நோய் உங்களை ஆட்கொண்டு, சளி தொல்லையும், உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகளால் உடலில் ஆங்காங்கே கட்டிகளும் உண்டாகி தொல்லை ஏற்படுத்தும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சிலருக்கு தாழ்மையான நிலை ஏற்பட்டு விலகும். உங்கள் மனமகிழ்ச்சிக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பங்கம் ஏற்பட வாய்ப்புண்டு.  உங்கள் தொழிலில் நீங்கள் நினைத்தது நடக்கும். உங்கள் வீடு, நிலபுலன்கள் வாயிலாக பண ஆதாயம் உண்டு.

கும்பம்:

பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இருக்கும்போதும், அதே கிரகங்களால், மனதில் ஏதோ ஒருவித கவலையையும் ஏற்படும். இதற்கு காரணங்கள் என்னவெனில், அந்த கிரகங்கள் சில நாட்கள் அதிசாரம், வக்கிரம் அடையும்போது இந்த நிலை ஏற்படலாம். ஏதோ ஒரு செயலை ஆரம்பித்தோம், முடித்தோம் என்று இல்லாமல், தொடர்கதை போல் நீளும் நிலையும் உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருந்தபோதிலும், வெற்றி உங்கள் பக்கமே. பிள்ளைகள் வாயிலாக புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும்.  வாழ்க்கை வசதிகள் மேம்படும்.

தொடர்புடையவை:  இரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்!

மீனம்:

தேவைக்காக அல்லாமல், குடும்பத்தைவிட்டு வேறுதேச குடிபுகுதல், திருடர்களால் பயம், பொருள் நஷ்டம் ஆகிய சாதகமற்ற பலன்கள் நிகழும் வாய்ப்புண்டு. வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள், பண்டங்கள் வாங்குதல், சத்ருக்கள் தொல்லைகளில் இருந்து விடுபடுதல் ஆகிய நற்பலன்களுக்கு வாய்ப்புண்டு. வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். உங்கள் மீது சிலர் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, மூக்குடைபட்டு விலகுவர். வாழ்க்கை வசதிகள் ஏற்படுவதில் சற்று பின்னடைவு ஏற்படும்.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *