கனமழை: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.*

அதிக மழைப்பொழிவு காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை அறிவிப்பு.

*ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை:*

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம், குமரி, துத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை  என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  இமயமலை புறப்பட்டார் ரஜினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *