2020ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

சனிதேவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடம் அளிக்கவுள்ளது.

வரும் சனிப்பெயர்ச்சியில் மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம் ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்க போகுதுங்க!

அதே போல தனுசு, கடகம், மகரம் மற்றும் மீன ராசிக்காரங்களுக்கு வருமானம் கூடப்போகுது

துலாம், விருச்சிக ராசி நேயர்களுக்கு வீீடு, மனை வாங்கும் யோகம் உண்டு

வரும் சனிப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது?

சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.

வரும் சனிப்பெயர்ச்சியில் உயர்பதவி கிடைக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்?

மேஷம், ரிஷபம், கன்னி, சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.

சனி பகவான், தான் நின்ற இடத்தை காட்டிலும் தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக அசுப செயல்களை செய்யக்கூடியவர் ஆவார்.

சனி பகவான் தான் நின்ற இடத்தில் இருந்து 3, 7 மற்றும் 10 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார். சனிதேவர் ராசிக்கு 3, 6, 11ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடியவர் என்று பழைய மூலநூல்களில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடத்திலும், சிம்ம ராசிக்கு ஆறாம் இடத்திலும், மீன ராசிக்கு பதினொன்றாம் இடத்திலும் இருந்து நன்மை செய்யவுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  இன்றைய ராசிப்பலன் - 02.01.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *