ஜனவரி 3-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜனவரி 3-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், அந்த தேர்வுகள் இன்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் என அனைத்துக்கும் சேர்த்து நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this
தொடர்புடையவை:  அரசுப் பள்ளியில் உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *