தூத்துக்குடியில் விடிய விடிய கன மழை

தூத்துக்குடியில் நேற்று முழுவதும் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரத்தில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக மழைநீர் பல்வேறு பகுதிகளில் தேங்கி இருந்தது இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் சாரல் மழையும், இரவு முழுவதும் விடியவிடிய இடைவிடாது காலை வரை கனமழையும் பெய்தது.

இந்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது.

தூத்துக்குடி ரயில்நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மழை நீர் குளம் போல தேங்கியது. இதனால் சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரயில் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து தண்டுவாளங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி ரயிலை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஸ்டேட் பேங்க் காலனி, எஸ்.கே. எஸ்.ஆர் காலனி, விக்டோரியா ரோடு, ரயில் நிலைய சாலை, கதிர்வேல் நகர், மறக்குடி தெரு, அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசு ஊழியர் குடிருப்பு பல பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக பெருகியது.

இந்த மழையாலும், தேங்கிய மழை நீராலும் மக்கள் மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  உள்ளாட்சித் தேர்தலில் மாற்று திறனாளிகளும் போட்டியிடலாம்: தமிழக அரசாணை வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *