டி.என்.பி.எஸ்.சி; 35 பேருக்கும் மீண்டும் எழுத்துத்தேர்வு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வந்த 35 பேருக்கும் மீண்டும் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இளநிலை உதவியாளர், நில அளவையர் உள்ளிட் 9,300 காலிப் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆயிரத்து 575 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் அதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் அமைக்கப்பட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 40 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

அதிலும் முதல் 17 இடங்களை இந்த பகுதிகளில் தேர்வு எழுதியவர்களே பிடித்துள்ளதால் இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதிலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர் ராமேஸ்வரத்திலும், கீழக்கரையிலும் தேர்வு எழுதியது சந்தேகத்தை வலுப்படுத்தியது. அதனையடுத்து, வெற்றி பெற்ற 35 தேர்வர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.அப்போது, 35 தேர்வர்களுக்கும் அலுவலகத்தில் வைத்தே மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அவர்களிடம் அறிவியல், பொதுத்தேர்வு, கணிதம் உள்ளிட்ட பகுதிகளிடமிருந்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. விசாரணையின்போது, எதற்காக சொந்த மாவட்டங்களை விடுத்து குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் தேர்வு செய்தீர்கள்? என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், இந்த விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களிடம் பேசக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு வந்த தேர்வர்கள் மூகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டுவந்தார்கள்.

Share this
தொடர்புடையவை:  கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடடிவக்கை எடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *