ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய  விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்ற 3 வருடம் முதல் 5 வருடம் வரை பணி அனுபவம் உள்ள 35 வயதிற்குட்பட்ட கார்ப்பெண்ட்டர்கள் (Carpenter – Mould Making or Finishing Products) பெருமளவில் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000/- முதல் ரூ.30,000/- வரை பணி அனுபவத்திற்கேற்ப வழங்குவதுடன் இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

மேலும், ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட கொத்தனார், கார்ப்பெண்ட்டர், பிளம்பர், பெயிண்ட்டர், ஐடிஐ எலக்ட்ரீஷியன் ஆகிய பிரிவுகளில் 2 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி மற்றும் செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omceq80@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூர் சாலை, வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.com வாயிலாகவும் மற்றும் 044-22505886 / 3220634389 / 22502267 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்.

இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வெளி விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண். Rc.No.B-0821/CHENNAI/CORP/1000+/5/308/84 ஆகும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.

Share this
தொடர்புடையவை:  தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *