ஒரு நபர் ஆணைத்தில் நடிகர் ரஜினிகாந்த ஆஜராவதிலிருந்து இன்று ஒரு நாள் மட்டும் விலக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் ஒரு நபர் ஆணைத்தில் நடிகர் ரஜினிகாந்த ஆஜராவதிலிருந்து இன்று ஒரு நாள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆணைய வழக்கறிஞர் வடிவேல் முருகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. விசாரணைக்கு ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு சம்மன் அனுப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சமூகவிரோதிகள் ஈடுபட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அப்போது கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது.

இன்று(25.2.2020) அவர் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நான் நேரில் ஆஜராகும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவே எனக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு நபர் ஆணையத்திடம் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளம்பாரதி ரஜினிகாந்த்த் சார்பில் ஒரு நபர் ஆணையத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து ஆணைய வழக்கறிஞர் வடிவேல் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, இந்த ஆணையத்தின் முன் பல்வேறு அரசியல் பிரமுகர்,பொதுநல அமைப்புகளை சார்ந்தவர்கள் என பலரும் ஆஜராகி சாட்சி அளித்து வருகின்றனர். அப்போதெல்லாம் காவல்துறையினர் உரிய பாதுகாப்பை வழங்கி உள்ளனர்,எனவே நடிகர் ரஜினிகாந்த் பாதுகாப்பை காரணமாக கூறி ஆணையத்தின் முன் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற முடியாது. நடிகர் ரஜினிகாந்த் ஆணையத்தின் முன் ஆஜராகும் போது காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள் என்றார். ஆணையத்தில் ஆஜராக மீண்டும் ரஜினிகாந்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றார்.
ஆணையம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கும் என கேட்டதின் அடிப்படையில் அது குறித்து ஒரு வரைவு அவரது வழக்கறிஞரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஆஜராகி அவர் பதில்களை அபிடேவிட்டாக தாக்கல் செய்யலாம் என்றார். இது நடைமுறையில் உள்ளது தான் என்றார். நிச்சயமாக அவர் வருவார் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் ஆணையத்திற்கு மிக அவசியம் என கருதுவதால் அவர் நிச்சயம் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றார்.

Share this
தொடர்புடையவை:  ஜூன் 30-ம் தேதி வரை நாட்டில் பொது முடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *