தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்ற வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

அதன் படி, 242 பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு கட்டணம்: ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ₹250 மற்றவர்களுக்கு ₹500

தேர்வு நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  பெசில் நிறுவனத்தில் 464 காலிப் பணியிடங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *