தி.மு.க. புதிய பொதுச்செயலாளர் யார்? :

அன்பழகன் மறைவை அடுத்து தி.மு.க.வின் பொது செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளரின் சில முக்கிய அதிகாரங்கள், கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் விரைவில் திமுக பொது செயலாளர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

துரைமுருகன் பொது செயலாளராக நியமிக்கப்பட்டால், பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு , திமுக எம்.பி. டி ஆர் பாலு , முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகிய 3 பேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல் தற்போது திமுக நாடாளுமன்ற தலைவராக இருக்கும் டிஆர் பாலு அவர்களும் அந்த பதவியை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் சமீபகாலமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் எ.வ.வேலு அவர்களும் இந்த பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்புடன் அரசியல் நடத்தி வந்த கேஎன் நேரு தான் ஒரு சீனியர் என்பதால் இந்த பதவிக்கு தகுதியானவர் என்று என் முக ஸ்டாலின் தரப்பிடம் முறையிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆ.ராசா மற்றும் பொன்முடியும் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைத்துள்ளதாகவும் திமுக தலைவரின் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களிடம் இதுகுறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Share this
தொடர்புடையவை:  தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *