டிவிட்டரில் டிரெண்டாடும் அஜித்தின் செயல்

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் ஒரு கோடியே இருபத்தி லட்ச ரூபாய் கொடுத்ததை அடுத்து இந்திய அளவில் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உதவ முன் வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைப்பட நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று நடிகர் ரஜினி 50 லட்சம் வழங்கினார். விஜய் சேதுபதி 10 லட்சம் வழங்கினார்.

Share this
தொடர்புடையவை:  நடிகர் விஜய் சேதுபதியை சினிமாவில் இருந்து விரட்டாமல் ஓயமாட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *