அமைதியாய்
உழல்கிறான்
உழவன்..

அன்றாடமொரு
அண்டிப்பிழைத்தலில்
தள்ளப்படுவதும்..

மணிக்கொருமுறை
மண்டியிட பாடம்
புகுத்தலும்..

நிமிடங்களில்
நிர்வானமாக்கி
நிலைகுலைத்தலும்..

நொடிகளில்
நாடி அறுத்து
பாடை ஏற்றுவதும்..

அறிந்தும்
அமைதியாய்
உழல்கிறான்
உழவன்..

சேற்றில்
சிதைவுற்றாலும்
மண்ணை
செழிக்கச்செய்யும்
மண்புழு போலவே..!!

  • அர்ச்சனா குருநாதன்-
Share this
தொடர்புடையவை:  மகள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *