ஜி7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்த காணொலி மாநாட்டில் பங்கேற்க பலநாடுகளுக்கும் டிரம்ப் அழைப்பு விடுக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கேப் கார்னிவலுக்கு சென்றுவிட்டு வாஷிங்டன் திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா , இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள ஜி 7 அமைப்பு மிகவும் காலாவதியான குழுவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this
தொடர்புடையவை:  தாண்டவன்காட்டில் அத்திவரதா் சயனக்கோலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *