அறம் செய்ய விரும்பு

நெஞ்சிலே ஈரம் கொண்டு
நேரிலே வறியோன் கண்டால்
கஞ்சனைப் போல இன்றி
கைகொளாச் செல்வம் ஈவாய்
பஞ்சினைப் பற்றும் தீயாய்
பசித்திடும் வயிறு நோக்கி
நஞ்சினைத் தோய்ந்த சொல்லை
நாவினைச் சுழற்றிக் கூறாய்

பஞ்சமில் பாசம் வைத்து
பல்லுயிர் காக்க என்றும்.
மிஞ்சிய வறுமை நோயால்
மிகுபல இன்னல் பட்டு
தஞ்சமென் றுன்னை எண்ணி
தரும்கரம் வணங்கிப் போற்றும்
குஞ்சுகள் காக்கும் தாயாய்
குவலயம் காப்போய் நாளும். சு.வி.லட்சுமி

Share this
தொடர்புடையவை:  மலர்களின் சதுரங்க விதிகள்

One Comment

  • SARADHA K. SANTOSH

    வாழ்த்துகள் கவிஞரே

    இன்னும் சில பந்திகள் அமைக்கலாமே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *