ஆளில்லா விண்கலம் அனுப்பம் திட்டம் ஒத்திப்பு

கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆளில்லா விண்கலம் அனுப்பம் திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த ஆண்டு இறுதி அல்லது தொடக்கத்தில் செயல்படுத்துவதாக இருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷியாவில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Share this
தொடர்புடையவை:  கடலின் மேல் விமானத்தை விட முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *