இந்தியாவின் டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு

2020ம் ஆண்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும்.

அதன்படி, இந்தியாவின் டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றில், சென்னை ஐஐடிக்கு முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய தரவரிசை பட்டியல் நிறுவனமான NIRF பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அதனை வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது, இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

Share this
தொடர்புடையவை:  எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளிலும் அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *