இயக்குனர் பிரபு சங்கரின்.. சரித்திரத் திரைப்படம்..

இராசேந்திர சோழன்..

ஒரு முன்னோட்டம்..

பாகுபலி ஒரு கற்பனைக் கதை..
ஆனால் அந்த கற்பனையையே மிஞ்சிவிடும் சாகசங்களை செய்த ஒருவன் நமது சரித்திரத்தில் வாழ்ந்தான்..

ஆயிரம் வருடங்களுக்கு முன் இரத்தமும் சதையுமாக நடமாடினான்..

போர் அவனது வாழ்க்கை முறை.
வாள் அவனது முதல் மனைவி,
வில் அவனுக்கு இரண்டாவது மனைவி.
தன் வாழ்நாளின் இருபது வருடங்களை கடற்போரிலேயே கழித்தவன்.
எதிர்த்து நின்றவர்களை தூசி கூட மிச்சம் இல்லாமல் தூர்வாரித் தள்ளியவன்.

60,000 யானைகள் கொண்ட யானைப் படைகளையும்,
25000 குதிரை படை..
9,00,000வீரர்களையும் கொண்ட ஒரு யுத்த சேனையை வங்கக் கடலை கிழித்து கடந்து கொண்டு போய் மறு கரையிலே நிறுத்திய அடுத்த நொடி,மறு பேச்சில்லாமல் வீழ்ந்த நாடுகள் ஏராளம்.

மலேசியா,தாய்லாந்து,
சிங்கப்பூர்,இந்தோனேசியா,ஜாவா,சுமத்திரா,இலங்கை என கிழக்கு ஆசியா மொத்தம் 46 நாடுகள் முழுவதும் வென்று அங்கே புலிக்கொடியைப் பறக்க விட்டவன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பேரரசன்..
தமிழ்ப் பேரரசன்..
“ராஜராஜ சோழன்” மகன்
புலிகொடி வேந்தன்…
பஞ்சவன் மாராயன்…
ஆசியா கண்டத்தை ஒரு குடையின் கீழ் ஆண்ட ஒரே மாமன்னன் தமிழ் அரசன்..
கங்கையும் கடாரம் கொண்ட கோப்பர கேசரி வர்மன்
“” ராஜேந்திர சோழன்””…….
கற்பனைக் கதைகளை கண்டிப்பாக ரசிப்போம்.
ஆனால் வரலாற்றை கற்றுக் கொடுப்போம்…..

இயக்குனர் பிரபு சங்கரின் தயாரிப்பில் சுமார் 130கோடி இந்தியா ரூபாய் மதிப்பில் ..
ஒரு மாபெரும் வரலாற்று திரை காவியம்.. விரைவில்
வெள்ளித் திரையில்..

Share this
தொடர்புடையவை:  தமிழ் ரீமேக்கில் பிஜு மேனன் கேரக்டரில் சசிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *