இரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்!

எந்த ராசிக்காரர்கள் வெறிலையை பயன்படுத்தி என்ன செய்தால் கஷ்டங்கள் தீரும்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் முருக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று பூஜையில் இரண்டு வெற்றிலை வைத்து அதன் மீது மாம்பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்து வெற்றிலையை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி கொள்ளலாம். மாம்பழத்தை சாப்பிட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் கஷ்டங்கள் உங்களை நெருங்காது. கவலைகள் பறந்தோடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் ராகு பகவானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு சென்று இரண்டு வெற்றிலையுடன் 9 மிளகு வைத்து வழிபாடு செய்து வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் அதனை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கடன் தொல்லை நீங்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் புதன் கிழமை அன்று உங்களது குலதெய்வத்திற்கு இரண்டு வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபாடு செய்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் தீரும். குலதெய்வ அருள் கிட்டும். சங்கடங்கள் பறந்தோடும். நிம்மதி கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் மாதுளம்பழம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கி நலம் கிட்டும். மனத்தெளிவு உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் வாழைப்பழம் வைத்து பூஜை செய்து அதனை உட்கொண்டால் தீராத துன்பங்கள் தீரும். குழம்பிய குட்டை போன்று இருந்த உங்களது மனம் தெளிவடையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து இரண்டு வெற்றிலையுடன் 27 மிளகு வைத்து உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வத்தை பூஜித்து இரண்டு வெற்றிலையுடன் கிராம்பு வைத்து வழிபாடு செய்து பின்னர் அதனை உட்கொண்டால் பிரச்சனைகள் நீங்கி இல்லம் அமைதி அடையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையை துதித்து இரண்டு வெற்றிலையுடன் பேரீச்சம் பழம் வைத்து வழிபட்டு உட்கொண்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையை வெறுத்தவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வியாழன் கிழமை அன்று முருகனுக்கு இரண்டு வெற்றிலையுடன் சிறிது கற்கண்டு வைத்து வழிபட்டு அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் அச்சுவெல்லம் சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் துன்பங்கள் நீங்கும்.

தொடர்புடையவை:  ஓரைகள் எனப்படுவது என்ன? அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா?

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் நெய் சிறிது சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். மனதில் உள்ள பாரங்கள் இறங்குவதை உணர்வீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஞாயிரு அன்று இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் சர்க்கரை சிறிது வைத்து பூஜை முடிந்ததும் அதனை உட்கொள்வதால் சகல பிணிகளும் தீரும். நிம்மதி கிடைக்கும்.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *