எனக்குள் இருக்கும் நான்

எனக்குள் இருக்கும் என்னை
முழுமை அடையச் செய்தலில்
முரண்படுதல் இயல்பான ஒன்றாகிறது.

வடிவமைக்கப் பட்டதிற்கும்
பொருத்திக் கொண்டதிற்கும்
ஒத்துப்போவதின் சாயலைத் தேடிக் களைத்துப் போகிறேன்.

என்னுள்ளானப் புரிதல்கள்
இருவேறு துருவங்களாக
தடுமாறுவதற்கும் தடம் மாறுவதற்குமான
திமிறவியலா நிர்ப்பந்தக் கட்டுகளில்
உடன்படுதலும் சுயசமாதானமுமே இறுதியாகிறது.

நிராகரிப்பற்ற அருகாமையை உணர்ந்து கொண்டு
எவரோ ஒருவரின் சாயலை பூசிக்கொண்டு
ஏதோவொன்றினை தேடிக் கண்டடைய ஓடிக்கொண்டே கழியும் அர்த்தமில்லா பொழுதுகள் எள்ளிநகையாடுகின்றன!

தடுமாற்ற நிலைகளில்
எனக்கான நியாயப்படுத்தலும் நானாக..
சுயசார்பு அரசியலில் மனதினுள்
எனக்கும் எனக்குமே நிரப்பவியலா நீள்பெரும் இடைவெளி இருக்கத்தான் செய்கிறது!

அன்புச்செல்வி சுப்புராஜூ

Share this
தொடர்புடையவை:  மூளைக்குள் சுற்றுலா!
நூல் ஆசிரியர் :
முதுமுனைவர் முதன்மைச் செயலர்
வெ. இறையன்பு, இ.ஆ.ப.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *