எறிபத்த நாயனார்

குலம்:அறியப்படவில்லை

பூசை நாள்:மாசி ஹஸ்தம்

அவதாரத் தலம்:கருவூர்

முக்தித்தலம்:கருவூர்

7 . எறிபத்தர் நாயன்மார்

எழில் நிறை வயற்சோலை எங்கும்
எழில் நிறை மாட மாளிகை
எழில் நிறை வான வீதிகள்
எழிலான அத்தகு சோழர்களின் தலைநகராம்

கருவூர் கருவுற்ற பசுமை எங்குமிருக்க
கருத்தான பசுங்கள் நிறைந்த நகராம்
கருமமே கண்ணாக காமதேனு வழிபட்ட
மருத்தீசராம் பசுபதீசர் எழுத்த ருளியத்

திருத்தலம் ஆனிலை என்னும் ஊராம்
திருத்தலத் திறையை சிக்கெனப் பற்றித்
திருத்தொண்டுகள் புரிபவர்கள் அங்கிருந் தார்கள்
அத்திருத் தொண்டர்களுக்கு சேவைப் புரிந்து

திருத்தொண்டாக சிவனை வணங்கி வந்தார்
சிறுத்தொண் டராம்எறி பத்தர் கையில்
சிறுக்கரு வியென்றும் ஏந்தி தொண்டர்களுக்கு
சிறுத்தீங்கு நேராவண்ணம் காத்து நின்றார்

சிறுக்கரு வியேபர சுயெனும் மழுப்படை
சீறிப்பாய்வார் எவராயினும் சிவனடிக்கு தீங்கிழைத்தால்
சினந்தீரும் வரையெதிர் படுவோர் மழுவுக்குத்தீனி
இச்சீரியத் தொண்டால் எறிபத்த ரானார்

ஒருசமயம் இவர்பக்தி உலகறிய செய்திட
ஓரசைவில் திருவிளை யாடல் புரிய முடியெடுத்தார்
ஓம்கார நாதன் உலகாளும் ஈசன்
தக்கச் சமயம் வந்தது ஆனிலையில்

பசுபதீச்வரர்க்கு நாள் தவறாமல் பூதாமம்
பணிந்து சாற்றித் திருத்தொண்டு புரியும்
பசுபதீசரின் ஆத்மத் தொண்டர் சிவகாமியாண்டார்
பக்தி யோடு வைகறையில் எழுந்து

திருநீராடி நந்தவனத்தில் முத்துபனிக் கொண்ட
நறுமலர்களைப் பறித்து தன்நாசிக் காற்றும்
நுகராமல் துணிக்கட்டி பூக்கூடையில் நிறைத்து
மனநிறை வடையாமல் இன்னும் மலர்களைத்

தேடித்தேடி கொய்து இறைவனுக்கு அளிப்பார்
தேனான சிவனின் அந்தணத் தொண்டராம்
பூக்கள் கொணர்ந்து வந்த அந்நேரம்
மகாநவமித் திருநாளின் முன்னாள் விழாக்கோலம்

பட்டத்து யானையும் அலங்காரமிட நீராடி
பட்டொளி யோடுக் குத்துக்காரர் நால்வரோடும்
பரந்த முதுகில் பாகனோடு வந்ததங்கே
பரமனின் லீலையால் திடீரென்று மதமேறி

பிளறி தெறித்து விட்டது மக்களை
பதறித் திரிந்த மக்கள் ஓடினர்
பதட்ட மடைந்த வயோதிக சிவகாமியாண்டாரும்
பரிதவித்து பூக்கூடையில் கவனம் செலுத்தி

விடுவிடுவென விரைந்தாலும் முதிர்வால் தடுமாறினார்
கடகடவென தன்துதிக் கையால் தட்டிவிட்டது
பொலபொல வெனநற் மலர்கள் சிதறின
சலசலப் பானவீதி யோபரப்பரப்பு பீதியிலிருக்க

ஆனிலை யானேஓலம்! ஓலம்! திருமலர்கள்
ஆடலரசனடி சேராது சிதறினவே ஓலம் !
ஈசனே ! எமையாளும் பரந்தாமா ! ஓலம்!
தயாபரா! என்ன நேருமோ! என்ன கதிக்கு

ஆளாகப் போவேனோ! மூலமே! முக்கண்ணா!
ஆவது ஒன்றுமில்லை இனிசாவதே உத்தமம்
ஆய்ந்து ஓய்ந்து ஓலமென கத்தியோய
ஆனிலையனை வணங்கி வந்துக் கொண்டிருந்த

எறிபத்தர் கண்ணில் வயோதிக அந்தணர்
நிலைக் காண யாதுயுற்ற தெனயறிந்து
நிலைக்கெட்ட மதயானை எத்திசைச் சென்றதோ
அத்திசை நோக்கி வெகுண்டு ஓடினார்

தொடர்புடையவை:  இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பாவை விழா

புனலென புரட்டிப் போட்ட மதக்களிறு
அனலென துரத்தி போய்நின் றார்மழுவோடு
தணலென துதிக்கையை வெட்டி வீழ்த்தினார்
புழுவென சாய்ந்தது மாயானை அங்கே

மதத்தை அடக்காது எந்தை ஈசனுக்காய்
மலர்க் கூடைச் சரிந்திட காரண மான
மடகுத்து கோற்வாளரை குத்தி வீழ்த்தினார்
முடமாய் அமர்ந்திருந்த பாகனையும் சேர்த்தே

தீயென பறந்தது சேதி பட்டத்தானை
சாய்தது ஐயகோ என்றே மன்னன்
புகழ்சோழன் படைச்சூழ விரைந்தார் அவ்விடமே
௹த்திர மூர்த்தியாய் மழுவேந்திய அடியாரைக்

கண்டதும் யாது நேர்ந்ததோ ? யாது
செய்தனரோ? யானையோடு ஐவரும் மடிந்திருக்க
திருவெண் ணீறுடன் ருத்திராட்ச மணியுடன்
சிவனடியாருக்கு தீங்கு நேர்ந்ததோ ? பதறினார்

மன்னா! பசுபதீச்வரை அர்ச்சிக்க வேண்டிய
நந்தவன நறுமலர்கள் கொய்து வந்த
நற்பண்பாளர் சிவகாமியாண்டார் அடியாரின் பூக்கூடையை
உமது மடயானை சிதறடித்தது அதனைத்

தடுக்காத அதனுடைய காவலற்களையும் வீழ்த்தினேன்
தணியாத கோபத்தில் நெஞ்சுறுதி யோடு யுரைக்க

உடன்சிவத் தொண்டின் மகிமை அறிந்த
உண்மை யன்பினர் பட்டத்து யானையெமது
உடமை ஆதலால் யாமேதவ றிழைத்தோம்
உள்ளபடி உணர்ந்து தமது வாளையெடுத்து

எறிபத்தரே! எமது வாளால் எம்மையும்
எறித்து விடுக! இப்பாவச் செயலுக்கு
அருமருந்து ” என்று உரைக்க., ஆஹா!
அரசனின் தூய அன்பும் பக்தியும்
எம்மை சிறியவ னாக்கியதே வாளால்
தம்மை மாய்த்துக் கொள்வதே உத்தமமென

உருவிய வாளைப் பெற்று தம்மை
கொடுக்க முனைய ளுயர்த்த கைநீட்ட
வானில் ஓரசிரீரி தொண்டனே! எறிபத்தா!
நிற்க! புகழ்சோழரே! எழுக! தம்மவர்களின்

சீரியத் தொண்டை உலகறிய, நடத்திய
லீலைகளில் ஒன்றே இச்சம்பவம் வாழ்க
நின்சேவை வளர்க சிவச்சேவை எம்மோடு
கலந்திடுக அமரத்துவமாக வாழ்க நாளும்

அம்மை யப்பனாய் அவ்வொலியில் காட்சியருள
அங்கிருந்த பூக்கூடை நிறைய சிவனடியார்
தொழுதிட பட்டத்தானை வாழ்த்த மாண்ட
ஐவரும் எழுந்து கைக்கூப்ப மெய்சிலிர்க்க
ஐக்கிய மானார் சிவகணமாக எறிபத்தர்

போற்றி அவன்தாள் போற்றி போற்றி
போற்றி புகழ்சோழர் நாமம் நாளும்
போற்றி சிவகாமி யாண்டார் போற்றி
போற்றி எந்நாளும் எறிபத்தரே போற்றி

இரா.விஜயகல்யாணி

Share this

8 Comments

 • Ravibharathi

  யாணைத் தமதுடமை யாதலால் -அது
  வினைபுரிந்தச் சேதத்திற்குத் தாமே
  பொருப்பென்று தண்டனைக்கு
  விருப்பமுன்ற தமிழ்ச்சோழ மன்னன்.!– தொண்டர்
  புத்தியுள் நிறைந்த பக்தியால் உத்தமராய்ச் செறிந்து ,-இறைவனடி
  சேர்ந்த எறிபத்தர்.!
  அருமை.! அருமை.!

 • Vijayakalyani

  வாசித்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

 • Anandhalakshmi t

  அருமை அருமை. அறுபத்து மூவரும் தொடர்ந்து வளம் வரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *