ஓ… இந்த ரத்தவகை கொண்டவர்களுக்கு கொரோனா வராதாம்!

மனிதர்களின் ரத்த வகைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பாதிப்புக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மரபணு ஆய்வுகளில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் “23 அண்ட் மீ” இதற்காக 75,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது.

இதில் முதல்கட்ட ஆய்வு முடிவில் “ஓ” ரத்த வகை பாதுகாப்பானதென தெரியவந்துள்ளது. ஓபாசிட்டிவ் மற்றும் ஓநெகடிவ் ரத்தவகை உடையவர்கள் கொரோனா தாக்குதலுக்கு ஆளாவதில்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஓ ரத்த வகை உடையவர்கள், மற்ற ரத்தவகையினரை விட 9 முதல் 18 சதவீதம் வைரசிடம் இருந்து பாதுகாப்பு பெற்றிருப்பதாகவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல், “ஏ” ரத்தவகையினருக்கு கொரோனா கடும் விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேறு பல ஆய்வு நிறுவனங்களும், ரத்த வகைக்கும், கொரோனா பாதிப்புக்கும் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஏபாசிடிவ், ஏநெகட்டிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ரத்தவகையினர் கொரோனாவால் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடியவர்கள் என்றும் ஓ ரத்த வகையினர் மற்ற ரத்தவகையினரை விட பாதுகாப்புடன் திகழ்வதும் தெரியவந்தது.

மேலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு ஆய்வுக்குழு, கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் நடத்திய ஆய்வில், ஏ ரத்தவகையினருக்கே நோய் தாக்கம் அதிகரித்ததாகவும், 50 சதவீதம்பேருக்கு வென்டிலேட்டர் தேவைப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.அமெரிக்காவில் நியூயார்க் பிரெஸ்பைட்டீரியன் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஏ ரத்தவகையினருக்கு மொத்த பாதிப்பில் 33 சதவீதம் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதும், ஓ ரத்த வகையினருக்கு குறைந்த பாதிப்பே ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இவை யாவும் இறுதிமுடிவுகள் அல்ல என்றபோதிலும் தனிநபர் ஒருவரின் ரத்தவகைக்கேற்ப நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் மாறுபடும் என்ற முந்தைய ஆய்வு முடிவுகளை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share this
தொடர்புடையவை:  வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் சோனியா சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *