காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கியதா?

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு திருப்பி விடப்பட்டதாக பா.ஜ., தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ., தலைவர் நட்டா, காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுவதும் பேரடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இதிலிருந்து ராஜிவ் அறக்கட்டளை(ஆர்ஜிஎப்)க்கு நன்கொடை வழங்கப்பட்டது

பிரதமர் நிவாரண நிதி வாரியத்தில் தலைவராக இருந்தது யார்? சோனியா

ராஜிவ் அறக்கட்டளையின் தலைமை பதவியில் இருந்தது யார்? சோனியா தான்.

எந்தவித அறிவுணர்வும் இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் இதன் நடைமுறைகள் இருந்துள்ளன. என தெரிவித்து அது தொடர்பான சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் நன்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *