குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பால், சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  ஆக.3 முதல் இலவச பாடநூல்கள், புத்தகப்பை வழங்க உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *