டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல், இருமல்

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல், இருமல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தன்னை தாமே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்.

நாளை (9 ம் தேதி ) அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சோதனை முடிவிற்கு பின்னரே அவரது நிலை குறித்த உண்மை நிலவரம் வெளியே தெரியவரும். கெஜ்ரிவாலை பொறுத்தவரை அவருக்கு அடிக்கடி இருமல் தொந்தரவு ஏற்கனவே இருந்து வருகிறது.

இதனால் மருத்துவர்கள் , கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் நலம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Share this
தொடர்புடையவை:  பாஸ்டாக் கட்டணம் 100 தள்ளுபடி - 15 நாட்களுக்கு பாஸ்டேக் இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *