தக்காளி விலை உயர்வு!

தக்காளி விலை தொடர்ந்து உயர்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தக்காளி விலை சரிவடைந்தது. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இறுதி வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 200 ரூபாய்க்கு விற்பனையானது.

அதன்பின், ஒரு கூடை தக்காளி தரத்தை பொறுத்து, 280 முதல், 300 ரூபாய் வரை விற்பனையானது. தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக, ஒரு கூடை தக்காளி, 320 முதல், 350 ரூபாய் வரை விற்பனையாகிறது. வறட்சியால் செடிகளில் தக்காளியின் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், மண்டிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து பெருமளவு சரிந்துள்ளது.

மேலும், திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளால் தேவை அதிகரித்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாகும். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this
தொடர்புடையவை:  குமரிக்கு படையெடுக்கும் வெளிமாவட்ட மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *