நாம் இன்னும் இருட்டில்தான் இருக்கிறோம்: சோனியா

மத்திய அரசு ஆலோசனைகள் கேட்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. கட்சிகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

பிரதமர் தலைமையிலான இந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசுகையில் ‘‘இந்த கூட்டம், என்னுடைய பார்வையில், மே 5-ந்தேதி சீன ராணுவம் லடாக் எல்லையில் பல இடங்களில் ஊடுருவி இந்திய எல்லைக்குள் வந்துள்ளது என்பதை அறிந்த உடன் கூட்டப்பட்டிருக்க வேண்டும்.

எப்போதுமே, ஒட்டுமொத்த தேசமும் ஒரு பாறை போல் ஒன்றாக நின்று நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளில் மத்திய அரசை முழுமையாக ஆதரித்திருக்கும்.

கடைசி கட்டத்தில் கூட, நெருக்கடியின் பல முக்கியமான அம்சங்களில் நாம் இன்னும் இருட்டில்தான் இருக்கிறோம். எங்கள் கட்சி மற்றும் ஒட்டுமொத்த எதிர்கட்சிகள் நாட்டின் பாதுக்காப்பு படைக்கு பின்னால் ஒற்றுமையாக நிற்போம். ஒட்டுமொத்த நாடும், சீனா தனது பழைய இடத்திற்கு திரும்பி செல்ல வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை விரும்புகிறது’’ என்றார்.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறுகையில் ‘‘நாம் சீனாவுக்கு முன் தலை வணங்கிவிடக் கூடாது. சீனா ஜனநாயக நாடு அல்ல. அது சர்வாதிகாரி நாடு. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்வார்கள். நான் ஒற்றுமையாக கைக்கோர்த்து நிற்க வேண்டும். இந்தியா வெல்லும், சீனா தோற்றும், ஒருங்கிணைந்து பேச வேண்டும். ஒருங்கிணைந்து யோசிக்க வேண்டும். ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்’’ என்றார்.

சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில் ‘‘நாம் அனைவரும் ஒன்று. நாங்கள் உங்களோடு (பிரதமர்) இருக்கிறோம். எங்களுடன் பேசியதற்காக உங்களை பாராட்ட விரும்புகிறேன். இந்தியா வலிமையாக உள்ளது’’ என்றார்.

Share this
தொடர்புடையவை:  இந்த விருதை என்னுடைய கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்: சோ. தர்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *