பாரத்நெட் திட்ட டெண்டர்களை ரத்து செய்திருப்பதற்கு வரவேற்பு: தினகரன்

பாரத்நெட் திட்ட டெண்டர்களை ரத்து செய்திருப்பதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், இது ஆரம்பம்தான், இன்னும் நிறைய முறைகேடுகள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளை இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக ரூ.1,950 கோடிக்கு பழனிசாமி அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்காக இந்த டெண்டர் விதிமுறைகளை பழனிசாமி அரசு சட்ட விரோதமான முறையில் மாற்றியதாக பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் இதன் மூலம் உண்மையாகியிருக்கின்றன.

இது ஆரம்பம்தான்..! துறைகள் தோறும் பங்காளிகள், சம்பந்திகள் எனச் சுற்றத்திற்காக இஷ்டம் போல வாரி வழங்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  பிரதமர் மோடிக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *