பிரதமர் இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார்

பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மாலை உரையாற்றுகிறாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவங்களிடையே பதற்றம் நிலவும் நிலையிலும், ஜூலை 1 முதல் நாட்டில் 2-ஆம் கட்ட பொதுமுடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் சூழலிலும் பிரதமா் மோடி உரையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட சுட்டுரை பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நாளை (ஜூன் 30) மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *