பெசில் நிறுவனத்தில் 464 காலிப் பணியிடங்கள்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 464 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சியும் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 464

பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (எம்டிஎஸ்)

தகுதி : 8-வது தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.16,341

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் ttps://www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: BECIL’s Head Office at BECIL, 14-B, Ring Road, I.P. Estate, New Delhi – 110002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 15.06.2020

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/cea5cf012dea9c70d1cf90dc2099a4a5.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share this
தொடர்புடையவை:  சென்னை கூட்டுறவு வங்கிகளில் வேலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *