மத்திய அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை முடக்குவதா ?

பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ 3 லட்சம் வரை சொத்து ஜாமீன் இன்றி வேளாண் கடன் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் வங்கிகள் ரூ 1.60 லட்சத்திற்கு மேல் கடன் பெற வேண்டுமானால் சொத்து உத்திரவாத பத்திரம் (MOD) செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவது ஏமாற்றமளிக்கிறது. இது குறித்து மத்திய அரசு தனது உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.

பொதுப்பணித் துறை சார்பில் துர்வாரும் பணிகள் பெருமளவில் நடைப்பெற்று வருவது பாராட்டுக்குரியது. இதற்கு முழு முயற்சி எடுத்து வரும் உயர் அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் குறுவைக்கு நேரடியாக மேட்டூர் அணையை திறந்து வைப்பதை வரவேற்கிறோம். குறுவை தொகுப்புத் திட்டம் வழங்க இயலாது என முதலமைச்சர் அறிவித்ததை மறுபரிசீலினை செய்து உடன் வழங்கி கொரோனாவால் முடங்கி உள்ள விவசாயிகளை ஊக்கப் படுத்திட வேண்டும்.

மத்திய அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை (PACB) மீண்டும் முற்றிலும் முடக்கும் உள்நோக்கத்தோடு விவசாயிகளுக்கு வேளாண் கடன்கள் வழங்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி கூட்டுறவு வேளாண் கடன்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒவ்வொரு விவசாயியும் தனித்தனி வங்கி கணக்குகள் துவங்கி பெற்றுக் கொள்ள வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் பங்கு த்தொகை மூலம் செயல்படுத்தப்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

2011-12 ம் நிதி ஆண்டில் இது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்க்கொண்ட போது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அதனை ஏற்கமாட்டோம் என அறிவித்ததோடு, தொடர்ந்து செயல்பட நடவடிக்கை மேற்க்கொண்டு செயல்படுத்தி காட்டினார். இந்நிலையில் தற்போது மீண்டும் முடக்கும் மத்திய அரசின் முயற்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனை தங்கள் ஊடகம், பத்திக்கைகளில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.

தங்கள், என்.மணிமாறன், செய்தி தொடர்பாளர் .

Share this
தொடர்புடையவை:  பாராம்பரிய நெல் திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *