மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவை சேர்ந்த டாக்டர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள்.

கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் கொரோனா பரவலை தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்?

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பவேண்டும்?

கொரோனா சிகிச்சை முறைகளில் செய்யவேண்டிய மாற்றங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பரிந்துரைகளாக வழங்க இருக்கிறார்கள்.

இதையடுத்து பகல் 12 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Share this
தொடர்புடையவை:  தூத்துக்குடியில் விடிய விடிய கன மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *