மீண்டும் ஒரு ஹாஸ் டேக் டிரண்டிங்…!

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்த விவகாரத்தில் நேற்று அவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில்,உயிரிழந்தஜெயராஜ்மற்றும் பென்னிக்ஸ்ஸிற்கு நீதிகிடைக்கவேண்டும்எனசினிமாத்துறை பிரபலங்கள்பலரும்தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ட்விட்டரில் “Justice For Jeyaraj And Fenix” என்கிறஹேஷ்டேக் இந்தியஅளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கூடுதல் நேரம் கடை வைத்திருந்ததாக சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட தந்தையும், மகனும் போலீஸ் காவலில் அடித்து துன்புறுத்தப்பட்டு பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அங்கே அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் அவர்களது குடும்பத்தினரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், அவர்கள் உடல்நலக் குறைவின்காரணமாக இறந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.இந்த சம்பவம்தொடர்பாக நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பூஅவருடைய ட்விட்டர் பக்கத்தில், ”எந்தவிததாமதமும் இன்றி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைப்பதை நாம் காண முடியுமா? குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே” என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் டி.இமான், ”அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களை கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. முழுக்க, முழுக்க மனிதத்தன்மையற்ற ஏற்றுக்கொள்ளவே முடியாததாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த இரக்கமற்ற நடைமுறைக்கு எதிராகநாம் குரல் கொடுக்கவேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்ட்” என அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாருமில்லை. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்குநீதி கிடைக்கவேண்டும்” என நடிகர்ஜெயம்ரவி பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ”சாத்தான்குளத்தில் நடந்தது கொடூரமானது. மனிதநேயத்தை அவமதிக்கும் செயல்.குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஏழை ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.சில மனிதர்கள் வைரஸ்களை விட ஆபத்தானவர்கள்” எனபதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித், ”பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே, நீங்கள் தான் மக்களின் அரசா?” என எழுதியுள்ளார்

Share this
தொடர்புடையவை:  திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *