மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.மதுரை, தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த பகுதியில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  உயிர்களை கடந்தும் மிச்சமிருக்கும் நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *