யோகாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்: நரேந்திர மோடி

கொரோனா பரவல் உள்ள நிலையில் யோகாவை கற்றுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
யோகாவின் பலன்களை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு நமது நாடும், உலகமும் உணர்ந்துள்ளது. எனவே உங்களது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை செய்து பழகுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

அனைவருக்கும் 6ஆவது சர்வதேச யோகா தின வாழ்த்துகள்.

யோகா நிறம், மதம், இனம் உள்ளிட்ட பாகுபாடுகளை பார்க்காது; மனிதநேயத்தை பலப்படுத்தும். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்காக நாளாக இது திகழ்கிறது.

கோவிட்-19 நோய்த்தொற்று சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது. ‘பிரணாயம்’, என்னும் ஒருவகை சுவாசப் பயிற்சி நமது சுவாச மண்டலத்தை வலிமையாக்க மிகவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால், அது நோய்க்கு எதிராக போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கென யோகா பயிற்சிகள் உள்ளன.

கொரோனா பரவல் உள்ள நிலையில் யோகாவை கற்றுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். யோகாவின் பலன்களை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு நமது நாடும், உலகமும் உணர்ந்துள்ளது. உங்களது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை செய்து பழகுங்கள் என்று பேசினார்.

Share this
தொடர்புடையவை:  ராஜ்நாத்சிங் தென்கொரியா பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *