30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசனை

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

மேலும் பள்ளிக் கல்விச் சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் குழுவினா், இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், பள்ளிகள் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

நிகழ் கல்வியாண்டில் (2020-2021) ஜூன் மாத தொடக்கத்தில் கற்றல், கற்பித்தல் பணிகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இக்கட்டான சூழலில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப் போகவே வாய்ப்பிருப்பதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்களை தெரிவிக்கின்றன.

அவ்வாறு தாமதமாகும் நிலையில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முழுமையாக நடத்துவது என்பது இயலாத காரியம். போதிய வேலைநாள்கள் இல்லாதது, பாடவேளைகள் குறைவது போன்ற காரணங்களால் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 சதவீதம் வரை பாடங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

Share this
தொடர்புடையவை:  தூத்துக்குடி மாவட்டம் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *