இந்தியா தொழில் துறையில் மீண்டும் வளர்ச்சி பெறும். என்னை நம்புங்கள்: மோடி

இந்திய வர்த்தக சம்மேளனத்தின் (ஐ.சி.சி) 95வது ஆண்டு நிறைவு கூட்டத் தொடரின் தொடக்க உரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்குகிறார்.

முன்னதாக, கடந்த ஜூன் 2ம் தேதி இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) 125வது ஆண்டு கூட்டத்தில் ஆன்லைன் மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதில், இந்தியா தொழில் துறையில் மீண்டும் வளர்ச்சி பெறும். என்னை நம்புங்கள், வளர்ச்சியைத் திரும்பப் பெறுவது அவ்வளவு கடினம் அல்ல. தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கான பாதை தொழில்துறைக்கு முன்பாக உள்ளது. நாம் இன்னும் பலமடைந்து உலகில் முன்னேறுவோம் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கூட்டதில் மேலும் பிரதமர் மோடி பேசியதாவது, கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும்; அதேநேரம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும்.மேட் இன் இந்தியா பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதே எனது ஆசை.

கொரோனா நமது வேகத்தை (வளர்ச்சியின்) மந்தப்படுத்தியிருக்கலாம், ஆனால் இந்தியா இப்போது ஊரடங்கின் இருந்து திறத்தல் கட்டம் -1 க்கு நகர்ந்துள்ளது. எனவே, ஒரு வகையில், வளர்ச்சியை மீண்டும் கொண்டுவருவதற்கான பாதை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

Share this
தொடர்புடையவை:  சமூக வலைதளம் முழுவதும் குவார்டனைக் கொண்டாடுவது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *