ஆக.3 முதல் இலவச பாடநூல்கள், புத்தகப்பை வழங்க உத்தரவு

அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து அதே பள்ளிகளில் தொடர வாய்ப்புள்ள 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  விடக்கூடாது... சத்தியமா விடவே கூடாது: ரஜினிகாந்த் டுவிட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *