ஆந்திரா:அனைத்து பொது நுழைவு தேர்வுகள் செப்.,-க்கு ஒத்திவைப்பு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் செப்.,வரையில் அனைத்து பொது நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநிலமுதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பொது நுழைவு தேர்வுகள்(சி.இ.டி) நிலையை மதிப்பீடு செய்தார்.

மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக சிஇடி -யை செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று இயல்புநிலைக்கு வந்த பின்னர் கல்லூரியின் இளங்கலை முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் . அதுவரையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும்.

தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க முயற்சிக்கப்படுகிறது. விரைவில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.

மாணவர்களின் நலனுக்காக சிஇடி மாதிரி சோதனகள் நடத்தப்படும் இவ்வாறு அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் கூறினார்.

Share this
தொடர்புடையவை:  புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *