இடைத்தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்படவில்லை

குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ஆம் தேதி அறிவித்தது.

எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மேலும், இடைத்தேர்தலுக்கான தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Share this
தொடர்புடையவை:  சென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிட விருப்ப மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *