இணைய வழி வகுப்புகளை தொடங்க சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு

அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்காக இணையவழி வகுப்புகளை தொடங்குமாறு சென்ன பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று முதுநிலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 3 முதல் இணையவழி வகுப்பு கள் தொடங்குகின்றன. அத்துடன் இளநிலை மாணவர்கள் சேர்க்கையை செடம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், முதலாம் ஆண்டில் சேரத் தொடங்கிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் இணையவழி வகுப்புகளை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை பல்கலைக்கழகம், ஆசிரியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்து தர வேண்டும் என கல்லூரி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.

Share this
தொடர்புடையவை:  சென்னையில் கரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *