இந்த பூமியும் காற்றும் எமது!

சூழல் :

காஷ்மீர எல்லையில்.. வீரர்கள்
கடினமான சூழ்நிலையிலும்
குழுவாக பாடி.. தம்மை தாமே
உற்சாகப்படுத்திக் கொள்வதாக..
பாடலை வரைந்துள்ளேன்..

பல்லவி

இந்த பூமி எமது.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
இந்த காற்றும் எமது.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
(2 முறை)

சலசலவென்று ஓடுகின்ற நீரும் எமது..
கன கனவென கொதிக்குமிந்த
இந்திய ரத்தம் எமது எமது..

வீறு கொண்டு எழுவோம் தோழா..
போரை வென்று வருவோம் வாடா..
தோள்கள் இணைந்து மண்ணைக் காப்போம்.. காப்போம் (குழுவாக)
தோட்டா ரவைகளால் எதிரிகளை
அழிப்போம்..
அழிப்போம்.. (குழுவாக)..

இந்த பூமி எமது.. இந்த காற்றும் எமது..
ஆ.. ஆ.. ஆ.. ஆ..

சரணம்1

கண்களை குத்தியெடுத்தாலும்
என் தேசமெனது கண்களாகும்..
மாரில் குண்டுகள் பாய்ந்தாலும்
எல்லையைக் காப்போம்.. மக்களைக் காப்போம்..

கால்களை இழந்தாலென்ன ..?!
கைகள் துண்டாலானாலென்ன?!
உயிரே போனாலென்ன ..?!
நாட்டின் ஒரு பிடி மண் போகாது.. போகாது (குழுவாக)
பகைவனை வேரறுத்துக் காப்போம்.. காப்போம்.. (குழுவாக)

இந்த பூமி எமது.. இந்த காற்றும் எமது.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..

சரணம் 2

நூற்று முப்பது கோடி மக்களின்
வேண்டுதல் உண்டு..
நாட்டிற்காக உயிர்த் தியாகம்
வேண்டும் இன்று..
கோட்டையில் உள்ளவர்கள் போடட்டும்
ஆட்டம்.. ஆட்டம்.. (குழுவாக)
எல்லையில் வந்து பார்.. எடுப்பர்
ஓட்டம்.. ஓட்டம்.. (குழுவாக)

இமயத்தில் இடைவிடாத பனிப்பொழிவா..?!
இதயத்தில் குடும்பத்தின் நினைவுகளா..?!
இராணுவ பீரங்கிகளின் எதிரொலியா..?!
கோழைகளின் சதிகளை முறியடிப்போம்..
முறியடிப்போம்.. (குழுவாக)
வெள்ளைப் பனிமலை குருதியில்
சிவந்து விடும்.. சிவந்து விடும் (குழுவாக)

இந்த பூமி எமது.. இந்த காற்றும் எமது..

சாரதா க. சந்தோஷ்
ஐதராபாத்

Share this
தொடர்புடையவை:  உன்னை நினைத்து
ஆசை வளர்த்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *