எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம்‌

முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ இன்று மாலை 5 மணியளவில்‌ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில்‌ தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ ஊரடங்கு தளர்வுகள்‌ குறித்து விரிவாக விவாதிக்கப்படும்‌ என்று தெரிகிறது

மேலும் தமிழகத்தில்‌ புதியதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள்‌, அதுகுறித்து பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள்‌ குறித்தும் ஆலோசனை நடைபெறும்‌ என கூறப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக்கு பின் முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Share this
தொடர்புடையவை:  நெல்லையப்பர் கோவில் பிரசாதத்திற்கு தரச் சான்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *